காஞ்சிபுரம், அருகே செய்யூர் கிராமத்தில் சங்ககாலப் புலவர்களில் ஒருவரான நல்லூர் நத்தத்தனாரின் நினைவாகத் தூண் ஒன்று அமைந்துள்ளது.
வருடந்தோறும், அரசு ஊழியர்கள் இந்த தூணிற்கு மாலை அணிவித்து, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்காக தமிழ் கவிஞர் நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அரசு ஊழியர்கள் நல்லூர் நத்தத்தனாரின் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர் ஈடிவி பாரத்திடம் அளித்த பேட்டியில், "பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்று சங்க இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாட்டுப் படை நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்றும், அவர் இடைக்கிழைநாடு நல்லூரில் பிறந்தவர்.
மேலும், சுமார் இரண்டாயிரம் வருடங்களாக இடைக்கழி நாட்டு நல்லூர் பகுதியானது பெயர் மாற்றமின்றி வழக்கத்தில் இருந்து வருகிறது" என்றார்.