ETV Bharat / state

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்... 10 கிராம மக்கள் அவதி! - வள்ளிமேடு தரைப்பாலம் உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் இளையானார் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு தரைப்பாலம் வெள்ளப் பெருக்கினால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

vallimedu Ground bridge damaged
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்... போக்குவரத்து பாதிக்கப்பட்டு 10 கிராம மக்கள் அவதி
author img

By

Published : Dec 11, 2020, 4:49 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியம் இளையனார் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிமேடு பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலமானது வர்தா புயலின்போது சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து அப்பாலத்திற்கு மாற்றாக சிறிய ரக உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நிவர் புயலின்போது, பெய்த கனமழை காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இளையனார் வேலூர், காவாந்தண்டலம், உச்சிக்கொல்லமேடு, வயலக்காவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாற்றுப்பாதையில் 20 கி.மீ சுற்றிவர வேண்டியுள்ளது. மருத்துவ வசதிகள் கூட பெறமுடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்... போக்குவரத்து பாதிக்கப்பட்டு 10 கிராம மக்கள் அவதி

மழைக்காலங்களுக்கு முன்னரே மேம்பாலப் பணிகளை பொதுமப்பணித்துறையினர் செய்துஇருந்தால், தற்போது பெய்த மழையில் பொதுமக்களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும், வள்ளிமேடு தரைப்பாலத்தில் தற்போது குறைந்தளவு நீர் வரத்து உள்ளதால், சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் சிமெண்ட் பைப்புகளை புதைத்து பொதுமக்கள் பயணிக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.