ETV Bharat / state

'பாழா போன கவர்மெண்ட் ஆபிசுல கக்கூஸ் கூட இல்ல...' - kancheepuram district news

இந்தியா, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக மாற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. வீடுகளுக்கு மானியம் மூலமாக கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இந்த முன்னெடுப்புகள் எல்லாம் வீடுகளுக்கு மட்டும்தானா? பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கழிவறை இல்லாதது குறித்து அரசுக்கு அக்கறை இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம்.

சரண்யாவின் தாய்
சரண்யாவின் தாய்
author img

By

Published : Dec 11, 2020, 4:22 PM IST

Updated : Dec 12, 2020, 9:30 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அரசு வேளாண் விரிவாக்க மையக் கிடங்கில் கழிவறை வசதி கிடையாது. இது தான், இளம் வயதிலேயே அரசு அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிய சரண்யா (24), நிறைவேறாதக் கனவுகளுடன் உயிரிழக்கக் காரணமாக அமைந்தது.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று, சரண்யா இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றிருக்கிறார். தான் பணிபுரியும் அலுவலகத்தில் கழிவறையில்லாததால் அருகிலிருக்கும் வீட்டின் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார். முழுவதும் கட்டிமுடிக்கப்படாத அந்தக் கழிவறையின் கழிவுநீர் தொட்டியின் மீது இருந்தப் பலகையைக் கவனிக்காத சரண்யா, அவசரத்தில் அதன் மீது கால் வைக்கவே, பலகை உடைந்து உள்ளே விழுந்துருக்கிறார்.

மழையில் இரைச்சலுக்கு நடுவில் சரண்யாவின் கூக்குரல் அங்கிருந்த யார் செவிகளையும் எட்டவில்லை. என்ன நடக்கிறது என சரண்யா சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்தது. வெகு நேரமாகியும் சரண்யா அலுவலகத்திற்கு திரும்பவில்லையே என சக ஊழியர்கள் தேடும் போது, பெண்கள் அணியும் காலனி ஒன்று கழிவறையிலிருக்கும் கழிவுநீர் தொட்டியில் மிதந்ததைக் கண்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த கழிவறை
விபத்து நேர்ந்த கழிவறை

அது சரண்யாவுடையது என அறிந்து அதிர்ந்த ஊழியர்கள், உயிருக்குப் போராட்டிக் கொண்டிருந்த சரண்யாவை மீட்டு முதலுதவி செய்ததுடன்,மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சரண்யா உயிரிழந்தார்.

ஆசையாய் ஆசையாய் தாங்கள் வளர்த்தச் செல்ல மகளை வெகுசீக்கிரத்தில் பிணவறையில் பார்ப்பார்கள் என சரண்யாவின் பெற்றோர் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள். ஒருவேளை களக்காட்டூர் பகுதி அரசு வேளாண் விரிவாக்க மையக் கிடங்கில் கழிவறை இருந்தால் சரண்யாவுக்கு இந்தநிலைமை ஏற்பட்டிருக்காது.

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்

“எப்போதும் போல தான் அன்னைக்கும் கிளம்பி போனா. என் குட்டிமாவுக்கு இப்படி ஆகும்னு நான் நினைக்கலயே. கஷ்பட்டு அவள படிக்க வெச்சோம். கலெக்டர் ஆகணும் சொல்லிகிட்டே இருப்பா. அதுக்கு முன்னாலயே வேலைக் கிடச்சுது. வேலைப் பாத்துக்கிட்டே படிக்கிறேன்னா. எப்படியும் அவ நினைச்ச மாதிரி ஆகிடுவானு நம்பிக்கையா இருந்தோம். இந்த பாழாப் போன ஆபிசுல ஒரு கக்கூஸ் இல்லாம போச்சே...”கண்ணீர் பொங்க தனது மகளுடனான நினைவுகளில் மௌனிக்கிறார், சரண்யாவின் தாயார்.

சரண்யா..லட்சியங்களோடு வாழ்ந்தவள்!

காஞ்சிபுரம் ஓரிக்கை ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம்-வேதவள்ளி தம்பதியின் அன்பு மகள் சரண்யா. மாற்றுத்திறனாளி சரண்யாவிற்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பதே லட்சியம். அதுவரையிலும் தனது குடும்பத்திற்கு சிரமத்தைக் கொடுக்க வேண்டாம் என நினைத்த சரண்யா, குரூப் 4 தேர்வு எழுதி, களக்காட்டூர் அரசு வேளாண் விரிவாக்க மையக் கிடங்கின் மேலாளராகப் பணிபுரிந்தார். அதில் வந்த வருமானம் மூலம் தனது கலெக்டர் கனவை நினைவாக்க முயன்றார்.

இப்படி தனது கனவை நோக்கி படிப்படியாக முன்னேறி சென்று கொண்டிருந்த சரண்யாவின் வாழ்க்கை ஒரே நொடி பொழுதில் முடிந்துவிட்டது. கழிவறை இல்லாத அரசு அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யாவின் கனவுகள் காற்றில் கலந்தன.

சரண்யாவின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரண்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் தர வேண்டும் எனவும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 3 வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேளாண்மை துறை இயக்குநருக்கு உத்தரவிட்டது. இதனிடையே, உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்திருக்கிறார்.

அரசு வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் முன்பெல்லாம் ஆண்களே பிரதான ஊழியர்கள். அதனால் கழிவறைகள் இல்லாதது பெரிய சிக்கலை ஏற்படுத்தியதில்லை. சமீப காலங்களில், சரண்யா போன்ற முதல் தலைமுறை பெண்கள் அங்கு பணிபுரியச் செல்லும்போது அடிப்படை வசதிகளில்லாதது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆண்மையப்படுத்தி அரசு அலுவலகங்கள் இருப்பதும் சரண்யாவின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்கிறார்கள் என மார்த்தட்டிக் கொள்ளும் அதே சமயம், அடிப்படை வசதிகளில்லாமல் பணி செய்யும் இடங்களில் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதை பொது சமூகம் கண்டும் காணாமல் இருக்கிறது. அலுவலகங்கள் பாலின சமத்துவத்தோடு உருவாக்கப்பட்டால் இது போன்ற உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். தங்களது மகளுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது தான் சரண்யாவின் பெற்றோருடைய குறைந்தபட்ச கோரிக்கையும் கூட.

இதையும் படிங்க:'நிலையான சுகாதாரத்திற்கான திறவுகோல் கழிவறைகள்': இந்தியாவின் நிலை என்ன?

Last Updated : Dec 12, 2020, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.