தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நாளை(மே.10) முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு உத்தரவின்படி அரசு மதுபான கடைகளையும் மூடவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (மே.8) ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 426 கோடி ரூபாய்க்கு அரசு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. காஞ்சிபுரம் மண்டலத்திலுள்ள 111 அரசு மதுபான கடைகளில் சுமார் 12 கோடிக்கும் அதிகமாக அரசு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
மதுபானக் கடைகள் இயங்க இன்று(மே.9) கடைசி நாள் என்பதால், காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான மதுபான பிரியர்கள் 14 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர்.
நேற்றைய மதுபானங்கள் விற்பனை காட்டிலும் இன்று(மே.9) அதிகமான அளவில் மதுபானங்கள் விற்பனையாவதால், தமிழநாடு அரசுக்கு இன்று(மே.9) அதிகமான வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பணியாளர்களுக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி