ETV Bharat / state

தீரன் பட பாணியில் அரசு ஊழியர் வீட்டில் நகைக்கொள்ளை! - kanchipuram crime news

காஞ்சிபுரம்: அரசு ஊழியரை அவரது வீட்டின் கழிவறையில் பூட்டிவிட்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

அரசு ஊழியர் வீடு
அரசு ஊழியர் வீடு
author img

By

Published : Dec 16, 2020, 1:33 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பட்டமுடையார் குப்பத்தில் வசித்துவருபவர் சண்முகம். சென்னை பல்கலைக்கழக அலுவலராக இவர் பணியாற்றிவருகிறார். மேலும் இவர் பட்டமுடையார் குப்பத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வீடு, தோட்ட பயிர் செய்து மனைவியுடன் வசிக்கிறார். இவரது மகன் கனடா நாட்டில் வசித்துவருகிறார்.

கத்தியைக் காட்டி மிரட்டல்

இந்நிலையில் இன்று(டிச.16) அதிகாலை 2 மணி அளவில் இவரது வீட்டில் நுழைந்த நான்கு முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சண்முகம் மற்றும் அவரது மனைவி சுகன்யாவை கத்தியை காட்டி மிரட்டி கழிவறைக்குள் தள்ளியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த நகை , வீட்டிலிருந்த நகைகள் என்று சுமார் 30 சவரன் நகையை கொள்ளையடித்து, சண்முகத்தின் மொபைல் போன்களையும் பறித்து தப்பி ஓடியுள்ளனர்.

களத்தில் காவல் துறை

இதனையடுத்து சண்முகம், அவரது மனைவி ஒருமணி நேரத்திற்குப் பிறகு கழிவறை கதவை உடைத்து வெளியே வந்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.

தீரன் படம் பாணி

மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டைக் கட்டி உள்ள அரசு ஊழியர் வீட்டில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்தவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் தீரன் பட பாணியில் கொள்ளையர்கள் நடந்துகொண்டதாகவும், உயிர் தப்பினால் போதும் என அனைத்தையும் விட்டுவிட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காஞ்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.