ETV Bharat / state

வடக்குப்பட்டு அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு - தொல்லியல் துறை

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் நடக்கும் அகழாய்வுப் பணியில் 1.6 கிராம் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்குபட்டு அகழ்வாய்வில் 1.6 கிராம் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

author img

By

Published : Sep 26, 2022, 3:54 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கின. மூன்று மாதங்களாக நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் அந்த பகுதியில் பழங்கால சிவன் சிலை தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வந்ததால் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அகழாய்வு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்குபட்டு அகழ்வாய்வில் 1.6 கிராம் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு
வடக்குபட்டு அகழ்வாய்வில் 1.6 கிராம் தங்க அணிகலன்கள் கண்டெடுப்பு

இதுவரை பழங்கால கல் மணி, கண்ணாடி மணி, எலும்பு உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ண பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்தன. இந்த நிலையில் 1.6 கிராம் தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதோடு ரோமானிய நாட்டு நுட்பத்தாலான ஆம்போரா ஓடுகள், ரவுலட்டட் ஓடுகள் மற்றும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் காதணிகள், சுடுமண் வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள், வளையல் துண்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசு இரட்டைக்கொள்கையை கையாள்கிறதா? - திருமாவளவன் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.