காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தின் முன்படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.
இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் பேருந்து ஓட்டுநர்.
இதனால் கொந்தளித்த பள்ளி மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்துவிட்டு கற்களை கொண்டு ஓட்டிநரை தாக்கியுள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து பொதுமக்கள் ஒன்று சேரவே அங்கிருந்து மாணவர்கள் நான்கு பேரும் தப்பியுள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவனை பிடித்த 40 வயது மதிக்கதக்க ரஜினி என்பவரை அம்மாணவன் தாக்கினார். இதில் தலையில் பலந்த காயமுற்று ரத்தம் சொட்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களே அம்மாணவனை பிடித்து சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வழக்கறிஞர் பகீர் தகவல்