ETV Bharat / state

சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்: ஆப்பு வைத்த ஜிபிஆர்எஸ் கருவி!

காஞ்சிபுரத்தில் சினிமா படத்தைப் பார்த்து விலை உயர்ந்த ஆடி காரை திருடிய இளைஞர்கள், காரிலிருந்த ஜிபிஆர்எஸ் கருவி மூலம் சிக்கினர்.

author img

By

Published : Jun 22, 2021, 7:52 AM IST

சினிமா படம் பார்த்து ஆடி காரை திருடிய இளைஞர்கள்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் நயப்பாக்கத்தில் சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (49) என்பவருக்கு ஓய்வெடுக்கும் வீடு ஒன்று உள்ளது.

தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் தன் மனைவி பிரியாவுடன் இங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜுன் 20ஆம் தேதியன்று அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் மாடி வழியாக வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டிலிருந்து மூன்று எல்இடி டிவி (LED), ஒரு மடிக்கணினி, வெளியே நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த ஆடி கார் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

காவல் துறையிடம் சிக்கிய பலே திருடர்கள்:

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் கொடுத்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையில் ஐந்து தனிப்படை காவல் துறையினர், திருடர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்கள், காரில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஆர்எஸ் கருவி மூலம் சைபர் கிரைம் காவல் துறையினர் குற்றவாளிகள் யார் என்பது குறித்தும், தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருட்டுச் சம்பவம் நடந்து 13 மணி நேரத்திற்குள் இதில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் சந்திரன் (24), பிரவீன் (24), லோகேஷ் (22), பிரகாஷ் (23) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 90 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஆடி கார், டிவி, லேப்டாப், கேமரா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கும்பல்

ஆடி காருக்கு ஆசைப்பட்டு ஆப்பு வாங்கிய இளைஞர்கள்:

இதையடுத்து, திருட்டுச் சம்பவத்தின் முக்கிய நபரான விஜய் சந்திரனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

'ஒரு சினிமா படத்தில் நடிகர்கள் காரை கடத்துவது போன்ற டெக்னிக்கை பார்த்து, அதே போல் செய்யத் துணிந்தேன். நயப்பாக்கத்தில் அவ்வப்போது ஏசி ரிப்பேர் செய்வது போன்று ரவிச்சந்திரன் அவர்களின் வீட்டில் நுழைந்து, அவர்களின் ஆடம்பர வசதிகளையும், சுற்றுப்புறத்தையும் நோட்டமிட்டேன்.

பின்னர், என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டிலிருந்த லேப்டாப், கேமரா, டிவி, ஆடி கார் ஆகியவற்றைத் திருடினோம்.

ஆனால், ஆடி காரில் ஜிபிஆர்எஸ் என்ற கருவி இருப்பது தெரியாது. அதன் மூலம் தான் காவல் துறையினரிடம் சிக்கப்போகிறோம் என்று துளிகூட எண்ணவில்லை.

அந்தக் கருவியின் மூலம் தான் காவல் துறையினர் நாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து கைது செய்தனர்' என்று விஜய் சந்திரன் புலம்பித் தள்ளியுள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரீல் வேறு ரியல் வேறு:

மேலும், கொள்ளை சம்பவம் நடைபெற்று 13 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினருக்கு, ரவிச்சந்திரன், அவரது மனைவி ஆகியோர் தங்களது நன்றியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தெரிவித்துக்கொண்டனர்.

சினிமா பட பாணியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என தப்பு கணக்கு போட்ட இளைஞர், 'ரீல் வேறு ரியல் வேறு' என்பதை அறியாமல், தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

காவல் துறைக்கு நன்றி தெரிவித்த ரவிச்சந்திரன்

இதையும் படிங்க: ஏடிஎம் 'ஷட்டரை' வைத்து சென்னையில் வித்தைக் காட்டும் நபர்கள்; பல லட்சம் அபேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.