அத்திவரதர் வைபவத்தின் 18ஆம் நாளான இன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:
சென்னை ஆவடியைச் சேர்ந்த நாராயணி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடராஜன், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கங்காலட்சுமி, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.