கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே செயல்பட்ட மீன் மார்க்கெட்டில் மக்கள் மீன் வாங்குவதற்காக குவிந்தனர்.
இதனால் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மீன் வாங்க வந்தவர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து மீன் வாங்கிச் செல்ல அனுமதித்தனர்.