காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதற்காக 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அவர்களின், உமிழ்நீர், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியானதில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பயிற்சி பெற்ற, பயிற்சியளித்த காவலர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த மருத்துவர்கள் அறிவுரை வழங்கிய நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சியை நகராட்சி அலுவலர்கள் பூட்டி பயிற்சி பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றவர்களுக்கு வாழ கற்றுக்கொடுத்த கரோனா முகாம்!