காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கு முன்பு பாலாற்றில் 1000 மீட்டர் தூரத்திற்கு 42.26 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய இடத்தில் தடுப்பணை கட்டாமல், திருமுக்கூடல் பகுதியில் தடுப்பணை கட்ட வேலைகளை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனால் இன்று (செப்டம்பர் 18) திருமுக்கூடல் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது வரும் திங்கள்கிழமை காலை திருமுக்கூடல் ஆற்றில் கட்டும் தடுப்பணையை தடுத்து நிறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பாலாறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த காஞ்சி அமுதன், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.