ETV Bharat / state

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - சக நடிகை சரண்யாவிடம் விசாரணை - RDO Enquiry

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, அவருடன் பணிபுரிந்த சக நடிகை சரண்யாவிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ இன்று விசாரணை நடத்தினார்.

சின்னத்திரை நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா
author img

By

Published : Dec 21, 2020, 5:57 PM IST

காஞ்சிபுரம்: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சித்ரா, ஹேம்நாத் ஆகியோரின் பெற்றோர்களிடம் கடந்த சில தினங்களாக ஆர்.டி.ஓ விசராணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா, அண்டை வீட்டாரகள், தற்கொலை நடந்த விடுதியின் ஊழியர் ஆகியோரிடம் ஸ்ரீபெரும்புத்தூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ இன்று (டிச.21) விசாரணை நடத்தினார். மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, தொழில் அல்லது பொருளாதார ரீதியிலான நெருக்கடியா என பல்வேறு கோணங்களில் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றது.

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை

இதையும் படிங்க: சித்ராவின் குடும்பத்தினரையும் விசாரிக்க வேண்டும் - ஹேம்நாத்தின் தந்தை வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.