இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிநாடுகளிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்த 78 பேர் 28 நாள்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 41 வயது ஆண் ஒருவர் கடந்த வாரம் கேரளா சென்று வந்ததால் கரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர், காஞ்சிபுரம் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் ஜீவா, “காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள், வெளி நோயாளிகளை பார்க்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம். வாரந்தோறும் மாத்திரை வாங்கிச் செல்ல வரும் பொதுமக்களுக்கு மார்ச் 24ஆம் தேதி இரண்டு மாதங்களுக்குத் தேவையான அனைத்து மாத்திரைகளும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கட்டடத்தை திறந்துவைத்த காஞ்சிபுரம் எம்எல்ஏ