ETV Bharat / state

நீ சரக்க மட்டும் குடு தல... நாங்க டோக்கன போடுறோம் எங்க ஸ்டைல்ல... - காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியிலுள்ள டாஸ்மாக்

காஞ்சிபுரம்: மதுபானக் கடைகளில் தகுந்த இடைவெளிக்காக வரையப்பட்ட வட்டங்களில் மதுபானம் வாங்க வந்தவர்கள் காலணிகளை வைத்து இடம்பிடித்து மதுபானம் வாங்க காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

drinkers in kaancheepuram reserve their queue to slippers  for buying liquor

author img

By

Published : May 8, 2020, 4:56 PM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசு மதுபானக் கடைகளை நேற்று முதல் திறக்கலாம் என அறிவித்திருந்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மீதமுள்ள 16 அரசு மதுபான கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அனைத்து கடைகளிலும் தகுந்த இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்கிச் செல்ல தடுப்புகள், நாற்காலிகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.

காலணிகளை வைத்து மதுபானம் வாங்க காத்திருந்த மதுப்பிரியர்கள்

இன்று காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் மதுபானங்களை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்த மதுப்பிரியர்கள் மதுபானக் கடைகளின் வாயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வரையப்பட்டுள்ள வட்டங்களில் தங்களது காலணிகளை வைத்து முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த மதுப்பிரியர்கள், வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதன் காரணமாக காலணிகளைக் கொண்டு முன்பதிவு செய்ததாகவும், தங்களின் முறை வரும்போது சென்று மதுபானம் வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அடை மழையிலும் அசையாமல் நின்ற மது பிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.