ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் தீவிரப்படுத்தப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை - காஞ்சிபுரத்தில் தீவிரப்படுத்தப்பட்ட கரோனா பரிசோதனை

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

door by door covid-19 test process severely implement in kaancheepuram

author img

By

Published : Jun 22, 2020, 1:37 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும்பொருட்டு, காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்துப் பேசிய நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, “சுகாதார அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ள அனைவருக்கும் முதலில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வர். பின்னர், வீட்டில் வேறு யாருக்கேனும் கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்டறியும் சோதனை செய்வர்.

இந்தப் பரிசோதனையின்போது, பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்பொருட்டு அனைத்து வீடுகளுக்கும் ஒரு நபருக்கு 10 ஊட்டச்சத்து மாத்திரைகள் வீதம் வழங்கப்படும். மேலும், யாருக்கேனும் தொற்று அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக, பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகராட்சியில் இந்தப் பணிக்காக 210 நகர்ப்புற, கிராமப்புற செவிலியர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களைக் கண்காணிக்க சுகாதாரத் துறை அலுவலர்கள் பத்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.