ETV Bharat / state

குடிமராமத்து திட்டப்பணிகளை ஆய்வு செய்த நீர்வள மேம்பாட்டு மேலாண்மை இயக்குநர்

காஞ்சிபுரம்: மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துத் திட்டப்பணிகள், வெள்ளத்தடுப்பு, நீர் சேகரிப்புப் பணிகளை தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.

குடிமராமத்து திட்டப்பணிகளை ஆய்வு செய்த நீர்வள மேம்பாட்டு மேலாண்மை இயக்குநர்!

author img

By

Published : Jun 27, 2020, 2:52 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டத்தில் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வடமங்கலம் ஏரியில் ரூ.52.59 லட்சம் மதிப்பீட்டிலும், கொளத்தூர் ஏரியில் ரூ.47.64 லட்சம் மதிப்பீட்டிலும் ஏரிகள் தூர்வாரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, அப்பகுதியை நேற்று (ஜூன்27) தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கே. சத்யகோபால், மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் ஒரத்தூரில் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம், சோமங்கலம் கிராமத்தில் ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம், வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.11.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆற்றுப்படுகை நீர்த்தேக்கம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சத்யகோபால், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள், நீர் வரத்து கால்வாய்கள் ஆகியவற்றைப் புணரமைத்திட முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.973 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 45 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன.

தற்போது இக்குடிமராமத்து திட்டப் பணிகளில் நான்காவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.1,731.09 லட்சம் மதிப்பீட்டுத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 32 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் ஏரியின் வரத்து கால்வாய்கள், மதகுகள், கலங்கல் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

இதையும் படிங்க...‘கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’- வலுக்கும் கோரிக்கைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.