காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி கோயிலில் இன்று(ஜூலை.3) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவர் சௌந்தரராஜன் இருவரும் தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர், "கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டுள்ளேன். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரை 45 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். அபராதம் விதித்து காவலர்கள் பாதுக்க வேண்டியுள்ளது. எனவே மக்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணியுங்கள்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த இலங்கை துணைத் தூதர்