தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள சப்த கண்ணியம்மன் கோயிலில் ஜீர்னோதாரண குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்ட பொது மக்கள், குழந்தைகள்,பெரியோர்கள் யாரும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக்கொண்டு கோவில் பிரசாதத்தை வாங்கிச் சென்றனர்.
இதனால், அப்பகுதியில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை: தமிழ்நாடு அரசு