ETV Bharat / state

63 வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு கரோனா பரிசோதனை; பின் சிறையில் அடைப்பு - ஹரியானாவில் கைதான குற்றவாளி

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறை ஹரியானாவில் கைது செய்த குற்றவாளிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை
விசாரணை
author img

By

Published : Jan 21, 2022, 7:45 PM IST

Updated : Jan 21, 2022, 10:47 PM IST

காஞ்சிபுரம்: பொய்யா குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி தியாகு என்ற தியாகராஜன் (34). இவர் மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள், கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, பணம் பறித்தல், உள்ளிட்ட 63 வழக்குகள் உள்ளன.

குற்றச் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், சிறைக்குச் சென்று பிணையில் வெளி வந்த நிலையில் தலைமறைவானார்.

இந்த நிலையில் தியாகு, ஹரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாகத் தனிப்படை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை காவல்துறை ஜன.20ஆம் தேதி (அதாவது நேற்று) ஹரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்று கொடுஹா என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரைப் பிடித்தனர்.

தொடர்ந்து, கைதான ரவுடி தியாகுவை இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்துவதற்கு முன்பாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குற்றவாளிக்கு கரோனா பரிசோதனை; பின் சிறையில் அடைப்பு

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தியாகுவிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படையின் ஏடி.எஸ்.பியாக என்கவுண்டர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதைத்தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் தியாகுவிடம் சுமார் 6 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் மாவட்ட நீதிபதி சந்திரன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர்.

இதை தொடர்ந்து அவரை பிப்.3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்திரன் உத்தரவிட்டதால் காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: லாரி கிளீனரின் அந்நியன் அவதாரம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்

Last Updated : Jan 21, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.