ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் கரோனாவால் முதல் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kanchipuram coronavirus deaths

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
author img

By

Published : Apr 25, 2020, 9:10 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 36). வெல்டிங் வேலை செய்து வந்த இவருக்கு சளி, இருமல், காய்ச்சல் காரணமாக குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என தெரியவந்துள்ளது.

இத்தகவலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உறுதி செய்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.