காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்ஆய்வாளர் ஒருவர், முக்கிய பிரமுகர்களை அனுமதிக்கும் வழியில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அவரை ஒருமையில் திட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
இதை கண்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து விசாரித்தார்.
அதில், இரவு பகலாக தன்னலம் கருதாது பணிபுரியும் காவல்ஆய்வாளரை ஒறுமையில் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பியதோடு, இரண்டு வாரங்களுக்குள் தலைமை செயலர், காவல்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.