ETV Bharat / state

தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

காஞ்சிபுரம்: சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

pongal festival
pongal festival
author img

By

Published : Jan 10, 2020, 10:46 PM IST

தைத்திருநாளம் தமிழர் திருநாள் வருகின்ற 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சமத்துவ பொங்கலை கொண்டாடிவருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பையம்பாடி கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சந்தோஷி குரூப் இன்ஸ்டிட்யூட் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் அக்கல்லூரியின் முதல்வர் காயத்ரிதேவி பங்குபெற்று சிறப்புரையாற்றினார். இதில், மாணவ, மாணவிகளுக்கு உரியடிப் போட்டி, கோலப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், கோலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்ற உற்சாகமாக பொங்கலைக் கொண்டாடினர்.

இதேபோல், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கே.ஆர். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், புலி ஆட்டம் உள்ளிட்ட பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் லிங்கராஜ் தலைமையில் பொங்கல் வைத்து மாணவர்கள் கொண்டாடினர். கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வாழ்த்தினை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். மேலும், கலை நிகழ்ச்சிகள், பானை உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதையும் படிங்க: களைகட்டிய கல்லூரி மாணவிகளின் சமத்துவ பொங்கல்!

Intro:மதுராந்தகம் அருகே பொங்கலிட்டு பொங்கல் விழா போட்டிகளில் பங்கேற்று தனியார் கல்லூரி மாணவ மாணவியர் அசத்தல்

Body:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பையம்பாடி கிராமத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சந்தோஷி குருப் இன்ஸ்டிட்யூட் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில்
500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அனைவரும் கிராமிய கலை நயத்தோடு புத்தாடை அணிந்து
புது பானை வைத்து பொங்கலிட்டு கொண்டிருந்தனர் இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உரியடி போட்டி
கோலப்போட்டி
கோலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது Conclusion:இவ்விழாவினை கல்லூரி முதல்வர் Dr காயத்ரிதேவி பங்குபெற்று சிறப்புரையாற்றி பொங்கல் நல்வாழ்த்துக்கள் மாணவ மாணவிகளுக்கு தெரிவித்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.