- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்,
- சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்படுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
- ஜாக்டோ ஜியோவின் 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு. சுப்ரமணியன் உள்ளிட்ட 5,068 பேர் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும்,
- கரோனா தொற்றைக் காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும்,
- அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்,
- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், அதேபோல் 21 மாத ஊதிய நிலுவையை வழங்கிட வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பெண் அரசு ஊழியர்கள் திடீரென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திரண்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவு வேளையிலும் அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்ததால், ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல்; எம். சிவசங்கருக்கு ஜாமீன்