காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியிலுள்ள நேரு நகரில் நேற்றிரவு (ஜன.05) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சியர், தங்களது குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து ஓரிக்கை செல்லம்மாள் நகர் பகுதிக்குச் சென்ற அவர் இரவு நேரங்களில் அப்பகுதியிலுள்ள தெரு விளக்குகள் சரி வர இயங்குகின்றதா என்பதனையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் மழைநீர் தேக்கத்தால் சிரமம்: ஆட்சியர் ஆய்வு