தமிழ்நாடு அரசு புதிதாக 118 அவசர ஊர்திகளை வழங்கியுள்ளது. இந்த 118 புதிய வண்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 10 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 10 புதிய வண்டிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாம்பதி, வெள்ளை கேட், ஸ்ரீபெரும்புதூர், மண்ணூர், தென்னேரி, சாலவாக்கம், பெரும்பாக்கம், தண்டலம், சோமங்கலம், படப்பை ஆகிய பகுதியிலுள்ள பொதுமக்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளன.
இந்த 10 புதிய வண்டிகளையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜீவா, மாவட்ட மேலாண்மை அலுவலர் செல்வமணி தேவராஜன் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல் தடுப்புப் பணி - தூய்மைப் பணியில் ஈடுபட்ட 300 பணியாளர்கள்