ETV Bharat / state

விவசாயி புகாருக்கு சிரித்த மின்வாரிய அதிகாரி: "ஏன் சிரிக்கிறீங்க?" - கோபப்பட்ட ஆட்சியர்! - Farmers Grievance Meeting

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி அளித்த புகாருக்கு மின்வாரிய அதிகாரி ஒருவர் சிரித்து மழுப்பலான பதில் அளித்ததால், "ஏன் சிரிக்கிறீங்க.? தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுங்க" என மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

officer laughs at farmer complaint
விவசாயி புகாருக்கு சிரித்த மின்வாரிய அதிகாரி
author img

By

Published : Aug 4, 2023, 12:22 PM IST

Updated : Aug 4, 2023, 1:14 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் 3 போகமும் நெல் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஞ்சாலம் என்பவரின் விவசாய நிலம் அருகே உள்ள 12க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், மூன்று மாதத்துக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக உடைந்து துண்டாகி விழுந்துள்ளது.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உண்டாகியுள்ளது. அதனால் பாஞ்சாலம் என்பவரின் 8 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஞ்சாலம் உத்திரமேரூர் மின்சார துறைக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி ஆகியோரிடம் முறையிட்டும் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். கோடை வெயிலில், பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் காய்ந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி பாஞ்சாலம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மின் வயர்கள் வாங்கி வந்து வேறொரு பகுதியிலிருந்து மின்சாரம் எடுத்து தற்போது தண்ணீர் பாய்ச்சி வருகிறாராம்.

கடந்த 3 மாத காலமாக மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்துள்ள நிலையில், பலமுறை மனு கொடுத்தும் அசையாத மின்வாரியத் துறையினரின் அலட்சியத்தை, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பெருமாள் என்ற விவசாயி புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மின்வாரியத்துறை சார்பில் கூட்டத்துக்கு வந்திருந்த காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை மின்வாரிய உதவி செயல் பொறியாளரிடம், இந்த பிரச்சனையை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டதற்கு மோகன் அளித்த பதிலில் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். உடனே பெருமாள் எழுந்து "இந்த அதிகாரிக்கு எதுவுமே தெரியவில்லை. ஏதோ உங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறார்" என தடாலடியாக ஆட்சியரிடம் தெரிவித்தார்.

இதனால் தர்மசங்கடம் அடைந்த அந்த அதிகாரி பெருமாளை பார்த்து சிரித்தப்படியே பதில் கூறினார். அதனைக் கண்டு எரிச்சலடைந்த மாவட்ட ஆட்சியர், "விவசாயிகள் பிரச்சனை பற்றி கூறினால் ஏன் சிரிக்கிறீர்கள்?. உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள்" என கோபத்துடன் கடிந்து கொண்டார்.

மேலும், குறிப்பிட்ட புகாருக்கான கோப்புகள் தற்போது எந்த அலுவலகத்தில் இருந்தாலும் நீங்களே கண்டுபிடித்து முன்னுரிமை அடிப்படையில் அந்தப் பிரச்சனையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் கூட்டரங்கில் இருந்த பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் பிரச்சனையை உடனுக்குடன் முடித்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மின்வாரியத் துறையினருக்கு உறுதியான எச்சரிக்கை விடுத்த செயல் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: Marilyn Monroe: காலம் தாண்டி நிற்கும் கனவுக்கன்னி "மர்லின் மன்றோ"... பேரழகும், பெரும் புதிர்களும்...!

Last Updated : Aug 4, 2023, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.