ETV Bharat / state

ரயில்வே மேம்பாலம் திறப்பு - நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் காஞ்சி மக்கள் மகிழ்ச்சி! - நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் ரூ.59.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உள்ளிட்டோர், கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Kan bridge
Kan bridge
author img

By

Published : Apr 7, 2022, 8:33 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகரத்தை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பது பொன்னேரிக்கரை சாலை. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள இந்த சாலையின் குறுக்கே இருப்பு பாதை இருப்பதால், ரயில் போக்குவரத்து காரணமாக, ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனால், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குறிப்பாக விபத்துப்பகுதியான நெடுஞ்சாலையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

இதனால் ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில், புதியதாக ஓர் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் நகர மக்கள் நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த 2017ஆம் ஆண்டு 59.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 927.33 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

New railway bridge
புதிய ரயில்வே மேம்பாலம்

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கொடியசைத்து வைத்து, வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.

நீண்டகால கோரிக்கை நிறைவேறியதால் காஞ்சிபுரம் நகர மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட 9 பாலங்கள் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.