ETV Bharat / state

பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை - பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ம் வகுப்பு மாணவன்

காஞ்சிபுரம் ஓரிக்கைப் பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவன் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை

author img

By

Published : Jul 19, 2022, 5:11 PM IST

காஞ்சிபுரம்: ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் பகுதியைச்சேர்ந்த மணிராம் - ரோஸ்லின் தம்பதியின் மகன் இஷிகாந்த் (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

மாணவன் இஷிகாந்தின் வித்தியாசமான நடவடிக்கையால் அம்மாணவனை நேற்றைய தினம் பள்ளி நிர்வாகம் சற்று கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவன் நேற்று மாலை பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்தததில் கை,கால்களில் காயமுற்று நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளான்.

பள்ளி நிர்வாகம் சார்பில் அம்மாணவனின் பெற்றோருக்கு அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த பெற்றோரிடம் அம்மாணவனை பள்ளி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து பெற்றோர் அம்மாணவனை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி மாணவனுக்கு அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அங்கு அம்மாணவன் சிகிச்சைப் பெற்று வருகிறான்.

இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தாரா, அல்லது எவ்வாறு கீழே விழுந்து காயமடைந்தார் என்பன குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளியில் ஆய்வு செய்து உரிய விசாரணை அறிக்கையை அளிக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவிட்டுள்ளதன் பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தாசில்தார் பிரகாஷ், ஆகியோர் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை
பள்ளி மாடியில் இருந்து குதித்த 11ம் வகுப்பு மாணவன்; ஆசிரியர்களிடம் விசாரணை

மேலும் இப்பள்ளியின் தாளாளர் அருண் குமார், ஆசிரியர்களிடம் அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் இன்னமும் புகார் வழங்காத நிலையில் கள்ளக்குறிச்சியை போல் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் காஞ்சிபுரம் காவல் கோட்ட டி.எஸ்.பி.தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இப்பள்ளியானது வழக்கம்போல் தொடர்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரத்திலேயே பல ஆண்டு காலமாக கற்பித்தலுக்கு பெயர் போன இப்பள்ளியில் இது போன்ற ஓர் நிகழ்வு நடைபெற்றுள்ளது அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம் - மெரினாவில் போலீஸ் குவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.