காஞ்சிபுரம் : சட்ட மேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்லும்போது இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும், வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலை அருகே மோதல் ஏற்பட்டதால் உணவகத்தில் இருந்த பொதுமக்களும், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருதிருந்த பயணிகளும் அலறியடித்து கொண்டு ஓடுகின்ற பரபரப்பான வீடியோக் கட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஸ்டாலின்