காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்முறையாக எல்இடி நீண்ட திரையும், ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவில் மேடை, கண்காட்சிக்கான கூடாரங்கள், 30 அடியில் கட்டவுட் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகளாக வாகனங்கள், விவசாயிகளுக்கு ஏர் உழும் இயந்திரம், மகளிருக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கப்படவுள்ளன. நாளை நடக்க இருக்கும் விழாவிற்குப் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பணிகளைக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், அதிமுக மாவட்ட - ஒன்றிய நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?