ETV Bharat / state

புயல், மழை சேத கணக்கெடுப்பை தொடங்கிய மத்தியக் குழு!

புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாடு வந்தனர்.

central team visits rain affected areas
central team visits rain affected areas
author img

By

Published : Dec 6, 2020, 10:25 PM IST

காஞ்சிபுரம்: நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில், நிவர் புரெவி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சேதங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக டெல்லியிலிருந்து மத்திய உள் துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாடு வந்தனர்.

அதன் பின்னர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஓர் பகுதியாக இன்று நிவர், புரெவி புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்ய மணிவாசகம் ஐ.ஏ.எஸ் ஒருங்கிணைப்பில், மத்திய மின்சார அதிகாரத்தின் துணை இயக்குநர் ஓ.பி.சுமன், மத்திய நிதித் துறை இணை இயக்குநர் அமித் குமார், மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குநர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங் ஆகிய மத்திய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர்.

பின்னர், மத்திய குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம் சந்தவேலூர் விஷார் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 53 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களையும், 1950 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், விஷார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டு அலுவலர்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

புயல், மழை சேத கணக்கெடுப்பை தொடங்கிய மத்தியக் குழு

இவர்களுடன் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வேளாண்மை துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் இருந்தனர்.

இந்த ஆய்வுகளை முடித்த பின்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்த அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் இக்குழுவினர் அளிக்கவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.