காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே சிறுமாத்தூர் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமான மூன்று தளங்களைக் கொண்ட அலுவலகம் ஒன்று இயங்கிவருகிறது.
இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் இன்று (ஜூலை 19) காலை மின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயை வீரர்கள் அணைத்தனர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அலுவலகத்தில் இருந்த பொருள்கள், குளிர்சாதன பெட்டிகள், முக்கிய ஆவணங்கள் என சுமார் 50 லட்சத்துக்கும் மேல் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் எரிந்த பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொழிற்சாலை நிர்வாகமும் ஈடுபட்டுவருகின்றது.
இதையும் படிங்க: கும்பகோணம் தீ விபத்து 17ஆம் ஆண்டு நினைவுத் தினம்- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!