காஞ்சிபுரம் மாவட்டம் அருட்பெருஞ் செல்வி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நான்கு வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிக்காக லாரி ஒன்று எம்சாண்ட் ஏற்றி வந்து இறக்கியுள்ளது.
வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த சிறுவன் மோனிஷ் விளையாட்டாக லாரியின் முகப்பின் பின்புறம் பிடித்துக்கொண்டு நின்றுள்ளான். இதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் லாரியை இயக்கியுள்ளார். அப்போது பின்புறம் நின்றிருந்த சிறுவன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் படுகாயம் அடைந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:மதுவிலக்கு பிரிவு காவலர்கள் நடத்திய சோதனை -184 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்