தமிழ்நாட்டில் கரோனா முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட தமிழ்நாடுஅரசை வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
கரோனா முழு ஊரடங்கு காலங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் எனவே டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து அன்னை இந்திரா காந்தி சாலையிலுள்ள காஞ்சிபுரம் நகர மேற்கு பா.ஜ.க அலுவலகம் முன்பு பா.ஜ.க நகர மேற்கு தலைவர் அதிசயம் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருப்புக் கோடி ஏந்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராக இதில் கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி குமார சாமி, அரசு தொடர்பு நகர தலைவர் காமேஷ், நகர பொது செயலாளர் திலகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
அதேபோல் காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் பா.ஜ.க நகர பொது செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் மாவட்ட பொது செயலாளர் கூரம் விஸ்வநாதன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:காஞ்சிபுரத்துக்கு 38,000 தடுப்பூசிகள் - 40 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி