குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்குவது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் எட்டு தலைமை ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார்.
மேலும் கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த 6 ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது