காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன் தாங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு நிலத்தினை வழங்கி இழப்பீடு பெற்ற விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இழப்பீடு வழங்கிய அரசு அலுவலர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்நிலையில் பீமன் தாங்கள் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்த மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், “இழப்பீடு தொகை பெற்ற 83 பேரின் வங்கிக் கணக்குகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின் பேரில் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
டிடிசிபி அனுமதியுடன் மனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை
இதன் காரணமாக பீமன் தாங்கள் இடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரின் குடும்பங்களும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், தாங்கள் வைத்துள்ள நிலத்திற்கு 1972ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பட்டா பெறப்பட்டு, உரிய ஆவணங்களுடன் டிடிசிபி அனுமதியுடன் மனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்யப்பட்ட இடத்தினை வாங்கி உள்ளதாகவும், அரசு புறம்போக்கு நிலத்திற்கும், தங்கள் நிலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்
இந்த நிலையில் மாவட்ட வருவாய் துறை ரத்து செய்துள்ள 83 பட்டாகளையும் திரும்ப அளிக்க வேண்டும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய வகையில் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலை அமைப்பதில் ரூ.200 கோடி முறைகேடு; 83 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்