காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் திருக்கோவில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் வைபவம் நேற்று தொடங்கியது. இதில் நேற்று மட்டும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் நீல நிற அலங்காரத்துடன் காட்சி அளித்த ஆதி அத்திவரதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.