40 வருடங்களுக்கு பிறகு எழுந்தருளி இருக்கும் அத்திவரதரை காண லட்சக்கணக்கில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்வதால் கூட்டம் அலைமோதி மக்கள் நெரிசலில் சிக்குகின்றனர்.
இன்று அப்படி கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மேலும் நான்கு பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க நாளை முதல் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்திவரதர் தரிசனத்திற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதிக்கப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.