ETV Bharat / state

காஞ்சிபுரம் வெடிகுண்டு சம்பவம்! மேலும், ஒரு வெடிபொருள் கண்டுபிடிப்பு - investigation

காஞ்சிபுரம்: மானாமதி பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து, அம்மாவட்ட காவல் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், மேலும் ஒரு வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் காவல் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் ஆய்வு
author img

By

Published : Aug 26, 2019, 8:43 PM IST

Updated : Aug 26, 2019, 9:07 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மானாமதி கங்கையம்மன் கோயில் பின்புறம் குளத்தைத் தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குளத்தில் புதையல் இருப்பதைக் கண்டு வெளியே எடுத்துவந்து பிரித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பொருள் வெடித்து விபத்துக்குள்ளனாது. இதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

வெடிகுண்டு
வெடிகுண்டு

இந்த விபத்து குறித்து, வெடிகுண்டு நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி பகுதியில் வெடித்த வெடிகுண்டு ராணுவத்திற்குச் சொந்தமான ராக்கெட் லாஞ்சர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்திற்கான துப்பாக்கிச்சூடு தளம் உள்ளது என்றும், அங்கிருந்து இயக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் குளத்தில் விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் வெடிகுண்டு சம்பவம்! மேலும், ஒரு வெடிபொருள் கண்டுபிடிப்பு

இதை ஆய்வு செய்த மருதம் வெடிகுண்டு சோதனைக்குழு, வெடித்தது ராணுவ வெடிகுண்டு என தெரிவித்தது. இதனையடுத்து, வெடிகுண்டு தடயவியல் துறைக்கு அந்த வெடிகுண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வெடிகுண்டை எடுத்து வந்து இயக்கிய போது வெடித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் காவல் துறையினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் காவல் துணை தலைவர் தேன்மொழி தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர் குழுவினர் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர் சோதனைக் குழுவினர் திருப்போரூர் விரைந்துள்ளனர். வெடிகுண்டு வெடித்ததில் கங்கையம்மன் கோயில் சுவர், அருகே இருந்த வீடுகளும் சேதமடைந்தன. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், மேலும் ஒரு வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி பகுதியில் நேற்று வெடித்த வெடிகுண்டு ராணுவத்திற்கு சொந்தமான ராக்கெட் லாண்சர். வெடிகுண்டு என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்திற்கான துப்பாக்கிச்சூடு தளம் உள்ளது அங்கிருந்து இயக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்காமல் குளத்தில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது மேலும் இந்த வெடி குண்டை எடுத்து வந்து இயக்கிய போது வெடித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று ஆய்வு செய்த மருதம் வெடிகுண்டு சோதனை குடும்பம் இது ராணுவ வெடிகுண்டு என தெரிவித்து சென்றுள்ளது எனவே வெடிகுண்டு தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதன் விசாரணை வந்த பிறகு முழு விவரம் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்Body:திருப்போரூர் அருகே நேற்று வெடி பொருள் வெடித்து 2 பேர் பலி மேலும் ஒரு வெடி பொருள் கண்டுபிடிப்பால் பதற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மானாமதி கங்கையம்மன் கோவில் பின்புறம் நேற்று இளைஞர்கள் குளத்தை தூர் வாரும் போது குளத்தில் புதையல் இருப்பதை கண்டு வெளியே கொண்டு வந்து பிரித்த போது வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் நேற்று சூர்யா என்ற இளைஞரும் இன்று திலிப் என்ற இளைஞர் என இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்

நேற்றே மோப்ப நாய் வெடிகுண்டு நிபுணர் சோதனை குழு ஆய்வு மேற்கொண்டனர்

இன்று காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சோதனை நிபுணர் குழு சோதனையில் ஈடுபட்டனர்

இந்த சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்

Conclusion:இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர் சோதனை குழுவினர் திருப்போரூர் விரைந்துள்ளனர்

நேற்று வெடிகுண்டு வெடித்ததில் கங்கையம்மன்கோவில் சுவர், அருகே இருந்த வீடுகளும் சேதமேடைந்துள்ளது

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ தளவாட பயிற்சிமையத்தில் இருந்து வந்த வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்

மேலும் ஒரு வெடிகுண்டு மானாமதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Aug 26, 2019, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.