காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. அம்மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
3 அம்ச கோரிக்கைகள்
- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்.
- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும்போது பணி கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்
இதையும் படிங்க:கடையநல்லூரில் புதிய தாலுக்கா அலுவலக கட்டடத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்