முதலமைச்சர் பழனிசாமியின் தாயாரை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவைக் கண்டித்து, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே அதிமுக மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் அடித்தனர். தொடர்ந்து பெண்களைப் பற்றி இழிவாக பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் உட்பட மகளிர் அணியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : உல்டாவாக உறியடித்த அதிமுக வேட்பாளர்.. சுக்கு நூறான பானை..