மக்களவைத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பரப்புரைக்களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் அருகே கல்பாக்கத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தனபாலன் அவர்களின் தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் அவர்களும், அதிமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான புரட்சி பாரதம், தேமுதிக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மரகதம் குமரவேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.