காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்த நாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.17) கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் தலைமையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம் ஏற்பாட்டில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திரு உருவப் படத்திற்குக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொது மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மேட்டுத்தெரு, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம், காந்தி சாலை தேரடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கும், கருக்குபேட்டை, வாலாஜாபாத் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர் சத்தியா, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் வி.ஆர்.மணிவண்ணன், கோல்ட் ரவி, மாவட்ட, ஒன்றிய, நகர முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்