காஞ்சிபுரம்: கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களில் கோயில்கள், மசூதிகள், தேவாயலங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
48 நாள்களுக்கு பிறகு கோயில் திறப்பு;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசத்தி பெற்ற கோயில்களான வரதராஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் இன்று காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்யத அனுமதியளிக்கப்பட்டது. பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டப் பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுகின்றனர். தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கோயில்களில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் கோயில்களில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்கள் தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
48 நாள்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து சேவை, கோயில்கள், துணிக் கடைகள் திறப்பு.. வேறு எதற்கெல்லாம் அனுமதி?