உலகபுகழ்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட 13 அடி உயரமுள்ள பெருமாள் சிலை எடுக்கப்படுவது வழக்கம். கடைசியாக 1979ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை இப்போது தரிசனத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனந்தசரஸ் குளத்தில் இருந்து நீர் வெளியேற்றி சிலை எடுக்கப்பட்டுள்ளது. பலவகை மூலிகைகள் கொண்டு சிலை சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக சிலை வெளியே வைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரவுள்ளதால் பலத்த காவல்துறை ஏற்பாடுகள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.