ETV Bharat / state

பொறியியல் மாணவர்களால் வானில் ஏவப்பட்ட துணை செயற்கைக்கோள் - வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்

காஞ்சிபுரம்: பொறியியல் கல்லூரி மாணவர்களால் வானில் ஏவப்பட்ட கேன் செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார்.

aerial-satellite-launched-by-engineering-students
aerial-satellite-launched-by-engineering-students
author img

By

Published : Feb 9, 2020, 10:32 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வடிவமைக்கப்பட்ட மூன்று வானிலை கண்காணிப்பு கேன் செயற்கைக்கோள் (CANSAT) வெற்றிகரமாக இன்று வானில் ஏவப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று வானில் ஏவப்பட்ட கேன் செயற்கைக்கோளைக் கண்டு ரசித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தற்போது உலகநாடுகளை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸைக் கண்டு பொதுமக்கள் பீதியடையவேண்டாம் எனவும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொறியியல் மாணவர்களால் வானில் ஏவப்பட்ட துணை செயற்கைக்கோள்

மாணவர்களால் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெவ்வேறு உயரங்களில் உள்ள வெப்பம், ஈரப்பதம், அழுத்தம், ஜிபிஎஸ் போன்ற தரவுகளை தரை நிலத்திலுள்ள கணினிக்கு அனுப்பியது. வானில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களைக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: சேலத்தில் பிரமாண்ட கிரிக்கெட் மைதானம் திறப்பு

Intro:காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வானில் ஏவப்பட்டCANSAT செயற்கைக்கோள்..
Body:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குன்னம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வடிவமைக்கப்பட்ட மூன்று வானிலை கண்காணிப்பு கேன் செயற்கைக்கோள்( CANSAT) வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற தலைவர் பங்கேற்று வானில் ஏவப்பட்ட CANSAT செயற்கைக்கோளை கண்டு ரசித்தார். மாணவர்களால் ஏவப்பட்ட இந்த செயற்கை கோள்களை வெவ்வேறு உயரங்களில் உள்ள வெப்பம் ஈரப்பதம் அழுத்தம் மற்றும் ஜிபிஎஸ் போன்ற தரவுகளை தரை நிலத்திலுள்ள கணினிக்கு செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்பட்டது. வானில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களை கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் என ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்..
இந்தியா இஸ்ரேல் 75 செயற்கை கோல் பணி 2022 முதற்படியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கேன் செயற்கைக்கோள் பயிற்சிகளை அளிக்க மாணவர்கள் முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...
Conclusion:நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மரிய வில்சன் முனைவர் கே கோபாலகிருஷ்ணன் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆர் வெங்கடேசன் தொழில்முனைவர் திரு ஜெகன் செல்வராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மெர்லின் லிவிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.