காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில், ஆதி காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சரவணன் என்பவர் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கறுத்தீஸ்வரர் கோயில் குருக்கள் நாகராஜன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அக்கோயில் அர்ச்சகர் பணிக்காக அவருடைய மகன் ஹரிக்கு கருணை அடிப்படையில் பணி பரிந்துரை செய்ய ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 2) முதல் தவணையாக ஹரியிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சரவணனை காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி கலைச்செல்வன், தலைமையிலான காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் அர்ச்சகர் பணிக்கு லஞ்சம் வாங்கிய நிர்வாகி கைது - லஞ்சம்
காஞ்சிபுரம்: கோயில் அர்சகர் பணிக்கு பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.