நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 35ஆவது நாளாக அத்திவரதர் வசந்த மண்டபத்தில் 5:30 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு வெந்தய நிற பட்டாடையில் மல்லிப்பூ, ரோஜா பூ மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிகாலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், 34ஆம் நாளான சனிக்கிழமையன்று ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், கடந்த 34 நாட்களில் 52 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.