ETV Bharat / state

6 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு! - காஞ்சிபுரம் செய்திகள்

காஞ்சிபுரம்: ஸ்ரீ ஆதி பீடம் பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டது.

6 crore rupees land rescued
6 crore rupees land rescued
author img

By

Published : Mar 19, 2020, 7:41 PM IST

காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதி பீடம் பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார், திருமாறன் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாத வாடகை செலுத்தி பயன்படுத்தி வந்தனர். அந்த நிலத்தை மீட்க இந்து அறநிலையத்துறை முயன்றபோது, அங்குள்ள நபர்கள் காலி செய்ய மறுத்துள்ளனர்.

6 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு!
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று இந்து அறநிலையத்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையின் உதவியுடன் மீட்டு சீல் வைத்தது.இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சரவணன் தலைமையில் உதவி ஆணையர் ரேணுகாதேவி, வருவாய் துறையினர், காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.